Jul 10, 2026
Thisaigal NewsYouTube
எண்டாவ் தொகுதியில் பெர்சத்து கட்சி போட்டியிடாததற்கான காரணம்; முஹ்யித்தீன் யாசின் விளக்கம்
தற்போதைய செய்திகள்

எண்டாவ் தொகுதியில் பெர்சத்து கட்சி போட்டியிடாததற்கான காரணம்; முஹ்யித்தீன் யாசின் விளக்கம்

Share:

ஜோஹர் மாநிலத் தேர்தலில் எண்டாவ் சட்டமன்றத் தொகுதியை தக்கவைத்துக் கொள்ளப் போட்டியிட வேண்டாம் என்ற பெர்சத்து கட்சியின் முடிவு, அங்குள்ள வெற்றி வாய்ப்புகளையும் கட்சியின் பலத்தையும் மறுபரிசீலனை செய்த பின்னரே எடுக்கப்பட்டது என்று அக்கட்சியின் தலைவர் தான் ஸ்ரீ முஹைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

இத்தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து விலகிச் சென்றதே இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் என்று குறிப்பிட்ட அவர், அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்பது கட்டாயமல்ல என்றும், அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவு மற்றும் வாக்காளர்களின் மனநிலையை அடிப்படையாகக் கொண்டே இந்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

முன்னதாக, பெர்சத்து கட்சியிலிருந்து விலகி மீண்டும் அம்னோ இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அல்வியா தாலிப், இம்முறை பாரிசான் நேஷனல் வேட்பாளராக எண்டாவ் தொகுதியில் களம் இறங்கியுள்ளார்.

மேலும், தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்ற நிலை ஏற்பட்டால், கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே ஆலோசிக்கப்படும் என்றும், முன்கூட்டியே எந்தக் கணிப்பையும் கூற விரும்பவில்லை என்றும் முஹ்யித்தீன் யாசின் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்