Sep 24, 2026
Thisaigal NewsYouTube
கோத்தா பாருவில் 2.01 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சிகரெட் கடத்தல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

கோத்தா பாருவில் 2.01 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சிகரெட் கடத்தல் முறியடிப்பு

Share:

சுமார் 10 லட்சம் வெள்ளை ரக சிகரெட்டுகளை கடத்த முயன்ற கும்பலின் முயற்சி, கடற்படை போலீசாரின் 16 கிலோமீட்டர் தூர அதிரடி விரட்டலுக்குப் பின் முறியடிக்கப்பட்டுள்ளது.

கோத்தா பாருவில் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற கடத்தல்காரர்களின் லாரியும் காரும் சாலையோரமாக விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் வாகனங்களை அப்படியே போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

அந்த வாகனங்களை சோதனையிட்டதில், கடத்தி வரப்பட்ட 976,800 வெள்ளை ரக சிகரெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் வாகனங்களின் மொத்த மதிப்பு 2.01 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. தப்பியோடிய கடத்தல்காரர்களை போலீசார் தேடி வரும் வேளையில், இச்சம்பவம் குறித்து சுங்கச்சட்டத்தின் கீழ் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News