Nov 21, 2026
Thisaigal NewsYouTube

ஜோஹர் மாநிலத் தேர்தல்: 56 தொகுதிகளில் 172 வேட்பாளர்கள் போட்டி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜோஹர் மாநிலத் தேர்தல்: 56 தொகுதிகளில் 172 வேட்பாளர்கள் போட்டி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

16-வது ஜோஹர் மாநிலத் தேர்தலில் மொத்தம் 172 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத் தலைவர் ராம்லான் ஹாரூன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹரப்பான் ஆகிய கூட்டணிகள் அங்குள்ள 56 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இவர்களைத் தவிர, பெரிகாத்தான் நேஷனல் 33 வேட்பாளர்களையும், பார்ட்டி பெர்சாமா மலேசியா 15 வேட்பாளர்களையும், மூடா 4 வேட்பாளர்களையும் களமிறக்கியுள்ளன. சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஓராங் அஸ்லி மலேசியா கட்சி ஆகியவை தலா ஒரு வேட்பாளரையும், சுயேச்சை வேட்பாளர்கள் 6 பேரும் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மொத்த வேட்பாளர்களில் 138 ஆண்களும் 34 பெண்களும் அடங்குவர். இதில் 3 தொகுதிகளில் ஐந்து முனைப் போட்டியும், 12 தொகுதிகளில் நான்கு முனைப் போட்டியும், 27 தொகுதிகளில் மூன்று முனைப் போட்டியும், 14 தொகுதிகளில் நேரடிப் போட்டியும் நிலவுகிறது. மேலும், இத்தேர்தலில் மொத்தம் 27.3 லட்சம் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →