Jun 27, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தும்;- சைபுடின் நசுத்தியோன்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தும்;- சைபுடின் நசுத்தியோன்

Share:

ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றால், யார் மந்திரி பெசார் என்பது உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அதன் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற வேட்புமனுத்தாக்கலின் போது, புத்ரி வாங்சா சட்டமன்றத் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோ மஸ்லி மாலிக் மற்றும் புக்கிட் பத்து சட்டமன்றத் தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஆர்தர் சியாங் சென் செர்ன்னை ஆகியோரை வழிநடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய முக்கியக் கவனம் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களைச் சிறப்பான முறையில் முன்னெடுப்பது மட்டுமே என்று டத்தோஸ்ரீ சைபுடின் குறிப்பிட்டார்.

ஜோகூர் மாநிலத்தின் 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பானின் அனைத்து வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் தேர்தல் ஆணையத்தால் வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது ஒரு நல்ல தொடக்கம் என்று மகிழ்ச்சி தெரிவித்த அவர், இனி வரும் நாட்களில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் மக்கள் நலத் திட்டங்களை வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்கும் தேர்தல் பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மத்திய அரசும் மாநில அரசும் ஒரே இணக்கமான கூட்டணியின் கீழ் இயங்குவது, ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் போன்ற ஜோகூர் மக்களின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும், மாபெரும் திட்டங்களின் வெற்றிக்கும் இன்றியமையாதது என்று உள்துறை அமைச்சரான டத்தோஸ்ரீ சைபுடின் தெரிவித்துள்ளார்.

Related News

போலீஸ் காரின் மீது செங்கல் வீசிய வீடற்ற வெளிநாட்டு நபர் கைது

போலீஸ் காரின் மீது செங்கல் வீசிய வீடற்ற வெளிநாட்டு நபர் கைது

வதந்திகளைத் தவிர்த்து உண்மை, தரவுகளுடன் பிரச்சாரம் செய்க: அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கறார் அறிவுறுத்தல்

வதந்திகளைத் தவிர்த்து உண்மை, தரவுகளுடன் பிரச்சாரம் செய்க: அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கறார் அறிவுறுத்தல்

கோத்தா பாருவில் 2.01 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சிகரெட் கடத்தல் முறியடிப்பு

கோத்தா பாருவில் 2.01 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சிகரெட் கடத்தல் முறியடிப்பு

ஜோஹர் மாநிலத் தேர்தல்: 56 தொகுதிகளில் 172 வேட்பாளர்கள் போட்டி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜோஹர் மாநிலத் தேர்தல்: 56 தொகுதிகளில் 172 வேட்பாளர்கள் போட்டி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தலைவர்கள் புடைசூழ, பெற்றோர் ஆசியுடன் ஸ்கூடாய் தொகுதியில் களம் இறங்கினார் கார்த்தியாயினி ஜெயபாலன்

தலைவர்கள் புடைசூழ, பெற்றோர் ஆசியுடன் ஸ்கூடாய் தொகுதியில் களம் இறங்கினார் கார்த்தியாயினி ஜெயபாலன்

எண்டாவ் தொகுதியில் பெர்சத்து கட்சி போட்டியிடாததற்கான காரணம்; முஹ்யித்தீன் யாசின் விளக்கம்

எண்டாவ் தொகுதியில் பெர்சத்து கட்சி போட்டியிடாததற்கான காரணம்; முஹ்யித்தீன் யாசின் விளக்கம்