Sep 26, 2026
Thisaigal NewsYouTube
மதுபோதை ஓட்டுநரின் காரால் மோதப்பட்டு தம்பதியர் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

மதுபோதை ஓட்டுநரின் காரால் மோதப்பட்டு தம்பதியர் உயிரிழப்பு

Share:

கோலாலம்பூர், மே.03-

மதுபோதையால் மீண்டுமொரு கோர விபத்து! நேற்று அதிகாலை 5.34 மணியளவில் ஜாலான் அம்பாங் பகுதியில் மதுபோதையில் காரோட்டிய 24 வயது இளைஞர் ஒருவரின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 61 வயதுடைய கணவரும் 56 வயதுடைய மனைவியும் பலத்த காயமடைந்து உயிரிழந்த நிலையில், காரை ஓட்டிச் சென்ற இளைஞரும் அவருடன் இருந்த இரு நண்பர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்து புலனாய்வு, அமலாக்கத் துறையின் தலைவர் உதவி ஆணையர் முகமட் ஸம்ஸுரி முகமட் இசா தெரிவித்தார்.

ஓட்டுநரின் இரத்தம், சிறுநீர் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதோடு, இந்த விபத்து குறித்து சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் கீழ் காவற்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News