Sep 28, 2026
Thisaigal NewsYouTube
கெடா மாநிலத்தில் மார்ச் 23-ஆம் தேதி கூடுதல் அரசு விடுமுறை அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

கெடா மாநிலத்தில் மார்ச் 23-ஆம் தேதி கூடுதல் அரசு விடுமுறை அறிவிப்பு

Share:

ஹரி ராயா கொண்டாட்டத்தை முன்னிட்டு வரும் மார்ச் 23-ஆம் தேதி, கெடா மாநில் அரசு கூடுதல் விடுமுறையை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது, மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது.

கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமது சனுசி முகமது நோர் இதனை உறுதிப்படுத்தினார்.

ஷவ்வால் முதல் நாளானது, வரும் மார்ச் 20 அல்லது மார்ச் 21-ஆம் தேதிகளில், எந்த நாளில் வந்தாலும், மார்ச் 23-ஆம் தேதி, திங்கட்கிழமை கூடுதல் விடுமுறையாகவே இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த முடிவானது, மத்திய அரசின் அறிவிப்பை பின்பற்றியே எடுக்கப்பட்டதாக கூறினார்.

Related News