Mar 10, 2026
Thisaigal NewsYouTube
ஜாலான் பேராக்கில் கிரேன் விபத்து: வங்கதேச ஆடவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

ஜாலான் பேராக்கில் கிரேன் விபத்து: வங்கதேச ஆடவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.07-

நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஜாலான் பேராக் சாலையில் விளம்பரப் பலகை பழுது பார்க்கும் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, spider lift இயந்திரத்திற்கு அடியில் சிக்கி வங்கதேச ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவமானது நேற்று இரவு சுமார் 10.40 மணியளவில் நிகழ்ந்ததாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் முஹமட் ஸம்சூரி முஹமட் இசா தெரிவித்தார்.

சம்பவத்தின் போது, இயந்திரமானது சமநிலை தவறி கவிழ்ந்ததில், அதை இயக்கிக் கொண்டிருந்த 32 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர், சாலையோரத்திலிருந்து, ரிமோட் கண்ட்ரோல் மூலம் பழுது பார்க்கும் பணிகளை மேற்கொண்டிருந்த போது, spider lift இயந்திரமானது நடைபாதையின் விளிம்பில் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதன் விளைவாக, இயந்திரமானது சமநிலையை இழந்து அந்த ஆடவர் மீது கவிழ்ந்தோடு அவருக்கு அருகில் இருந்த இரண்டு வாகனங்களையும் நசுக்கியது.

இவ்விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரரிடம் போலீசார் மேல் விசாரணை செய்து வருகின்றனர்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு