May 24, 2026
Thisaigal NewsYouTube
மூன்று நபர்களை SPRM கைது செய்தது
தற்போதைய செய்திகள்

மூன்று நபர்களை SPRM கைது செய்தது

Share:

ஆகஸ்ட் 03-

செம்பனைத் தொழில் துறை நிறுவனம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை மறைப்பதற்கு லஞ்சம் பெற்றதாக மூன்று நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.

40 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் SPRM தலைமையகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டுள்ள 40 வயது மதிக்கத்தக்க பெண், அந்த நிறுவனத்தில் கணிக்கியல் நிர்வாகியாக பணியாற்றி வந்தவர் ஆவார். லஞ்சம் பெறுவதற்கான பரிமாற்ற வேலைகளில் இந்தப் பெண் மூளையாக இருந்து செயல்பட்டுள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இதர இரண்டு ஆண்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் செயலாளர்களாக பணியாற்றியுள்ளனர். இரு தரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுவதை தாமதப் படுத்துவற்காக அந்த முக்கியப் பத்திரங்களை மறைத்து வைப்பதில் மூவரும் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர் என்பது SPRM விசாரணையில் தெரியவந்துள்ளது.

SPRM சட்டத்தின் கீழ் மூவர் கைது செய்யப்பட்டதை SPRM விசாரணைப்பிரிவின் மூத்த இயக்குநர் Hishamuddin Hashim உறுதி படுத்தியுள்ளார்.

Related News