மருத்துவமனையில் சேவையாற்றிவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டு இருந்த மருத்துவர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
41 வயது டாக்டர் சந்தீப் சிங் பந்த்லியா என்ற அந்த மருத்துவர் பயணித்த கார், வழித்தடத்திலிருந்து விலகி எதிரே வந்த லோரியில் மோதியதில் அந்த மருத்துவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி க்ரிஸ்டோபர் பாதிட் தெரிவித்தார்.
இவ்விபத்து இன்று காலை 9.40 மணியளவில் மலாக்கா, ஜாலான் க்ரூபோங் கில் நிகழ்ந்ததாக ஏசிபி க்ரிஷ் குறிப்பிட்டார்.








