Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கிளந்தான் மாநில போலீஸ் தலைவரை வறுத்தெடுத்து வரும் தரப்பினரைச் சாடினார் அமைச்சர் சைஃபுடின்
தற்போதைய செய்திகள்

கிளந்தான் மாநில போலீஸ் தலைவரை வறுத்தெடுத்து வரும் தரப்பினரைச் சாடினார் அமைச்சர் சைஃபுடின்

Share:

புத்ராஜெயா, செப்டம்பர்.23-

வயது குறைந்தவர்கள் மத்தியில் இணக்கத்தின் பேரின் நடைபெறும் பாலியல் தொடர்பு குறித்து தம்முடைய தனிப்பட்ட கருத்தை வெளிப்படுத்திய கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் முகமட் யூசோஃப் மாமாட்டை வறுத்தெடுத்து வரும் தரப்பினரை உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் சாடினார்.

கிளந்தான் மாநிலத்தில் வயது குறைந்தவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் பாலியல் தொடர்புகள் தொடர்பான குற்றச்செயல்களின் புள்ளி விபரங்களை அடிப்படையாகக் கொண்டு, மாநில போலீஸ் தலைவர் என்ற முறையில் தம்முடைய தனிப்பட்ட கருத்தையும், அச்சத்தையும் அந்த உயர் போலீஸ் அதிகாரி வெளிப்படுத்தியுள்ளார்.

அது குறித்து உள்துறை அமைச்சர் என்ற முறையில் தாம் கருத்து தெரிவிப்பதற்கு இன்னும் நேரம் கனியவில்லை. இருப்பினும், அந்த உயர் போலீஸ் அதிகாரிகளின் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் அவரை தனிப்பட்ட முறையில் சாடி வருவது ஏற்புடைய செயல் அல்ல என்று சைஃபுடின் விளக்கினார்.

கிளந்தான் மாநிலத்தில் வயது குறைந்தவர்கள் மத்தியில் நடைபெற்று வரும் பாலியல் தொடர்புகளில் 90 விழுக்காடு இரு பாலரின் விருப்பதின் பேரில் நடக்கின்றன. இந்நிலையில் பாலியல் பலாத்காரம் என்ற பெயரில் இதில் சம்பந்தப்படக்கூடிய ஆண்களை மட்டும் நீதிமன்றத்தில் நிறுத்தி, குற்றச்சாட்டும் நிலை ஏற்படுகிறது.

ஆனால், இந்த குற்றச்செயலுக்கு உடந்தையாக இருக்கும் பெண் தண்டிக்கப்படுவது இல்லை. எனவே இதற்கு உடந்தையாக இருந்த பெண்ணையும் தண்டிப்பதற்கு நடப்பு குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் முகமட் யூசோஃப் மாமாட் கருத்துரைத்தார்.

அந்த உயர் போலீஸ் அதிகாரியின் கருத்து பெரும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் அவரை பல்வேறு தரப்பினர் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

இது குறித்து மேலும் கருத்துரைத்த அமைச்சர் சைஃபுடின், கற்களை வீசி, போலீஸ்காரர் காயமுற்ற சம்பவத்தில் மவுனம் காக்கும் சமூகம், இவ்விவகாரத்தில் வீறு கொண்டு எழுவது குறித்து கேள்வி எழுப்பினார்.

Related News