ஈப்போ, ஆகஸ்ட்.27-
17 வயது மாணவர் ஒருவரைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக இடைநிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
38 வயது ஐரில் இஸ்வான் மாட் ஷம்சூரி என்ற அந்த ஆசிரியர் நீதிபதி ஜீன் ஷர்மிளா ஜேசுதாசன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் வாசிக்கப்பட்டன..
கடந்த ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி ஈப்போ, கெர்பாங் மேருவில் உள்ள ஒரு வீடு உட்பட மேலும் இரண்டு இடங்களில் அந்த மாணவரைப் பாலியல் பாலியல் பலாத்காரம் புரிந்தததாக அந்த ஆசிரியருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் ஆசிரியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








