Mar 27, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கத்தின் எரிபொருள் சீரமைப்பு முயற்சி / வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்க நிறுவனங்களுக்கு MEF வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

அரசாங்கத்தின் எரிபொருள் சீரமைப்பு முயற்சி / வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்க நிறுவனங்களுக்கு MEF வலியுறுத்து

Share:

மலேசிய அரசாங்கத்தின் எரிபொருள் சீரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக, முக்கியமல்லாத பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி வழங்குமாறு மலேசிய நிறுவனங்களின் கூட்டமைப்பான MEF, நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

நிறுவனங்கள் உற்பத்தித்திறன் மற்றும் செயல்பாடுகளை பாதிக்காமல் நடைமுறைசார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என MEF தலைவர் சையத் ஹுசைன் சையத் ஹுஸ்மான் வலியுறுத்தியுள்ளார்.

தனியார் துறையில், சாத்தியமான இடங்களில் முக்கியமல்லாத பணிகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அமல்படுத்துவது, கார் பூலிங் முயற்சிகளை ஊக்குவிப்பது, மேலும் பொதுப் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்துவதை ஊக்குவிப்பது ஆகியவை அவற்றில் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் மூலம் எரிபொருள் பயன்பாட்டை குறைத்து, செலவினச் சுமையை தளர்த்த முடியும் என MEF நம்புவதாகவும் சையத் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தேவையற்ற பயணங்களைக் குறைத்துக்கொள்வதோடு, தளவாடங்கள் மற்றும் வணிகப் பயணங்கள் சார்ந்த செயல்பாட்டு நடைமுறைகளை மறுமதிப்பீடு செய்யுமாறும் அவர், நிறுவன முதலாளிகளை வலியுறுத்தியுள்ளார்.

Related News