Sep 28, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளானில் இரயில் தண்டவாளத்தில் கேபிள் திருட்டில் ஈடுபட முயன்ற ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

கிள்ளானில் இரயில் தண்டவாளத்தில் கேபிள் திருட்டில் ஈடுபட முயன்ற ஆடவர் கைது

Share:

கிள்ளான் கம்போங் ராஜா ஊடா பகுதியில், இரயில் தண்டவாளத்தில் கேபிள் திருட முயன்ற ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை 6.10 மணியளவில், சந்தேகத்திற்கிடமான வகையில் அப்பகுதியில் சுற்றித் திரிந்த ஆடவரை, ரோந்துப் பணியில் இருந்த KTMB போலீசார் விசாரணை செய்தனர்.

அப்போது அந்த ஆடவர் தப்பியோட முயற்சி செய்துள்ளார்.

இருப்பினும், அவரை மடக்கிப் பிடித்த போலீசார், அவரிடமிருந்து கத்தி, கத்தரிக் கோல் உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், அந்த ஆடவர் கேபிள் திருட்டில் ஈடுபட முயற்சி செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அந்த ஆடவர், விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related News