May 31, 2026
Thisaigal NewsYouTube
விசிட் மலேசியா 2026: காமாத்தான், கவாய் விழாக்களுடன் விமான நிலையங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு
தற்போதைய செய்திகள்

விசிட் மலேசியா 2026: காமாத்தான், கவாய் விழாக்களுடன் விமான நிலையங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு

Share:

கோலாலம்பூர், மே.31-

விசிட் மலேசியா 2026 விளம்பரத்தை முன்னிட்டு, சபாவின் காமாத்தான் திருவிழா மற்றும் சரவாக்கின் கவாய் தினத்தை ஒட்டி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியை மலேசிய சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சி கோத்தா கினபாலு, கோலாலம்பூர் மற்றும் கூச்சிங் ஆகிய மூன்று முக்கிய அனைத்துலக விமான நிலையங்களில் நடைபெற்று வருகின்றது.

விமான நிலையங்களுக்கு வருகை புரியும் பயணிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்படுவதுடன், மலேசியர்களின் பாரம்பரிய விருந்தோம்பலை பிரதிபலிக்கும் வகையில் டோடோல் இனிப்பும் பரிமாறப்பட்டு வருகின்றது.

கோலாலம்பூர் KLIA முனையம் 1-ல் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுலா, கலை மற்றும் கலாசார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஷாஹாருடின் அபு சோஹோட், சுற்றுலா திட்டமிடல் பிரிவின் இடைக்கால துணை இயக்குநர் விஸானி ரோஸ்மின், மலேசிய ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் டத்தின் கிரிஸ்டினா தோ உள்ளிட்டோருடன் சுற்றுலாத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், பிரதிநிதிகள் மற்றும் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே, பிலிப்பைன்ஸ், வியட்நாம், சீனா, தென் கொரியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 15 ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்கள் பங்கேற்கும் 8 நாள் “Mega Fam” சுற்றுப் பயணமும் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த மே 29 முதல் ஜூன் 5 -ஆம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சி, காமாத்தான் மற்றும் கவாய் விழாக்களின் சிறப்புகளை உலக அரங்கில் விளம்பரப்படுத்துவதோடு, கலாசார சுற்றுலா மையமாக மலேசியாவின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related News