Jun 16, 2026
Thisaigal NewsYouTube
தும்பாட்டில் பூட்டிய அறையில் மகனின் சடலம் - தாய் அதிர்ச்சி
தற்போதைய செய்திகள்

தும்பாட்டில் பூட்டிய அறையில் மகனின் சடலம் - தாய் அதிர்ச்சி

Share:

தும்பாட், மே.31-

கிளந்தான் மாநிலம், தும்பாட்டில், கம்போங் டாலாம் ரூ பகுதியில், 35 வயதுடைய தனது மகன் வீட்டின் பூட்டிய அறையில் உயிரிழந்த நிலையில் கிடந்ததைக் கண்ட தாய் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து தும்பாட் மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Khairi Shafie வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று மாலை 6.27 மணியளவில் சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து, போலீசாரும் தும்பாட் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மீட்கப்பட்ட சடலமானது அதிகளவில் சிதைவடைந்திருந்ததால் மரணத்திற்கான துல்லிய காரணத்தை கண்டறிய முடியவில்லை என்றும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் "காரணம் உறுதிப்படுத்த முடியவில்லை" என பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News