Jun 9, 2026
Thisaigal NewsYouTube
தங்கச் சங்கிலி பறிப்பு: பண்டார் கின்ராரா பகுதியில் சந்தேக நபர் கைது
தற்போதைய செய்திகள்

தங்கச் சங்கிலி பறிப்பு: பண்டார் கின்ராரா பகுதியில் சந்தேக நபர் கைது

Share:

கோலாலம்பூர், மே.31-

செராஸ் பகுதியில் உள்ள உணவகத்தில் காலை உணவருந்திக் கொண்டிருந்த நபரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி, Taman Connaught பகுதியில் உள்ள ஓர் உணவகத்திற்கு வெளியே அத்தம்பதி அமர்ந்திருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், அந்நபரின் பின்னால் இருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் ரோஸ்டி டாவுட் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த மே 24-ஆம் தேதி பண்டார் கின்ராரா பகுதியில் அந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு மலேசிய குற்றவியல் சட்டம் பிரிவு 392-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Related News