ஜோகூர்பாரு, இஸ்கண்டார் புத்ரி, புக்கிட் இண்டா 2 இல் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தேதி நிகழ்ந்த வீடு புகுந்து திருடப்படட சம்பவம் தொடர்பான காணொளியை போலீஸ் துறை பெற்ற போதிலும் இந்த களவாடலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் இன்னமும் புலன் விசாரணை செய்து வருகின்றனர் என்று இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரஹ்மத் ஆரிஃபின் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் எந்தவொரு நபரும் கைது செய்யப்படவில்லை என்றாலும் போலீசார் தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார். வீட்டின் பொருட்களை சூறையாடும் காட்சிகள் அந்த காணொளியில் தெரிவாக பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.








