கல்வியில் சிறந்து விளங்குவது மட்டுமே, தன்னம்பிக்கையும், போட்டித்திறனும் கொண்ட எதிர்காலத் தலைமுறையை உருவாக்கப் போதாது என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ நான்சி ஷுக்ரி தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் மனநலம், சமூக வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் திறன்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சரவாக் மாநில சமூக நலத்துறையின் குழந்தைகள் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், குடும்பப் பின்னணி, பொருளாதார நிலை, உடல் திறன் மற்றும் வாழும் இடம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலில் வளர்வதற்கான உரிமையைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அறிவாற்றல், நற்பண்பு, தன்னம்பிக்கை, போட்டித்திறன் மற்றும் ஒற்றுமை உணர்வு கொண்ட குழந்தைகளை உருவாக்குவதற்கு அவர்களின் உடல்நலம், உணர்வுபூர்வ நலம், சமூக வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் திறன்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் நான்சி ஷுக்ரி வலியுறுத்தியுள்ளார்.








