Nov 29, 2026
Thisaigal NewsYouTube

பள்ளியில் ஆசிரியர்களைச் சந்தித்த பிறகே 200 ரிங்கிட் கல்வி உதவித் தொகை: பெற்றோர்களுக்கு அன்வார் வலியுறுத்தல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பள்ளியில் ஆசிரியர்களைச் சந்தித்த பிறகே 200 ரிங்கிட் கல்வி உதவித் தொகை: பெற்றோர்களுக்கு அன்வார் வலியுறுத்தல்

2027-ஆம் ஆண்டில், பள்ளி மாணவர்களுக்கான 200 ரிங்கிட் ஆரம்பக் கல்வி உதவித்தொகையைப் பெற்றோர்கள் நேரடியாகப் பள்ளிக்குச் சென்று பெற்றுக் கொள்ளும் முடிவானது, அவர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தைக் கண்காணிக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்த உதவியானது அனைத்து தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்றும், முன்பு போல வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படாது என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

பினாங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யாகின் மடானி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அன்வார், பெற்றோர்கள், ஆண்டுக்கு ஒருமுறையாவது பள்ளிக்குச் சென்று, ஒரு மணி நேரமாவது ஆசிரியர்களுடன் செலவிட்டு தங்களின் பிள்ளைகளைப் பற்றி அறிந்து கொள்வதில் என்ன சிரமம்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், குழந்தைகளின் படிப்பு, ஒழுக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களிடம் பெற்றோர் நேரடியாகக் கேட்டறிய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

அதேவேளையில் குழந்தைகளின் கல்வி ஆசிரியர்களின் பொறுப்பு மட்டுமல்ல என்றும், பெற்றோர்களுக்கும் அதில் முக்கியப் பங்கு உள்ளதாகவும் அன்வார் விளக்கமளித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சரவாக் தேர்தலில் ஜசெக போட்டியிடுவது பக்காத்தான் ஒற்றுமையைப் பாதிக்காது – ஷாரெட்ஸான் ஜொஹான்  நம்பிக்கை

சரவாக் தேர்தலில் ஜசெக போட்டியிடுவது பக்காத்தான் ஒற்றுமையைப் பாதிக்காது – ஷாரெட்ஸான் ஜொஹான் நம்பிக்கை

இந்தியப் பயணத்தின் போது தவறுதலாகத் தடுக்கப்பட்ட சுமதிக்கு அரசாங்கம் 75 ஆயிரம் இழப்பீடு

இந்தியப் பயணத்தின் போது தவறுதலாகத் தடுக்கப்பட்ட சுமதிக்கு அரசாங்கம் 75 ஆயிரம் இழப்பீடு

சரவாக்கில் 29 தொகுதிகளில் போட்டியின்றி வெற்றி – 6.32 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தேவையில்லை

சரவாக்கில் 29 தொகுதிகளில் போட்டியின்றி வெற்றி – 6.32 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தேவையில்லை

கல்வி மட்டுமின்றி குழந்தைகளின் உணர்வுப்பூர்வ வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: அமைச்சர் நான்சி ஷுக்ரி

கல்வி மட்டுமின்றி குழந்தைகளின் உணர்வுப்பூர்வ வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: அமைச்சர் நான்சி ஷுக்ரி

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட டொயோட்டா ஹைலக்ஸ் – தந்தை, மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட டொயோட்டா ஹைலக்ஸ் – தந்தை, மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

வெள்ள பாதிப்பு: சபாவில் அதிகரிப்பு, சிலாங்கூர், பேராவில் குறைந்தது

வெள்ள பாதிப்பு: சபாவில் அதிகரிப்பு, சிலாங்கூர், பேராவில் குறைந்தது