சபா, சிலாங்கூர் மற்றும் பேராக் ஆகிய மூன்று மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், மொத்தம் 1,284 பேர் ஒன்பது தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி, சபா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 935 ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, Beaufort, சூக் மற்றும் நபாவான் மாவட்டங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன.
அதேவேளையில், சிலாங்கூர் மாநிலத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 539 பேராகவும், பேராக் மாநிலத்தில் 180 பேராகவும் குறைந்துள்ளது.
எனினும், சிலாங்கூரில் கோலா லங்காட் பகுதியில் மூன்று நிவாரண மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
மேலும், பேராக் மாநிலத்தில் வெள்ளம் குறைந்ததைத் தொடர்ந்து ஏழு பேர் வீடு திரும்பியுள்ளனர்.
இருப்பினும், வெள்ளநீர் தேங்கியுள்ளதால் பாடாங் செராய்-பெருவாஸ் சாலை இலகுரக வாகனப் போக்குவரத்துக்கு தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.








