புடு பகுதியில் நேற்று நள்ளிரவு கடை ஒன்றின் வெளியே ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
முகநூல் நேரலை ஒளிபரப்பின் மூலம் ஆடவர் ஒருவரை அவரது அனுமதியின்றி, சமூக ஆர்வலர் ஒருவர் காணொளி எடுத்ததே தகராறுக்குக் காரணம் என டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் அஸ்வான் அமீன் நோர்டின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 44 வயதுடைய அந்த புகார்தாரர், அதிகாலை 2.52 மணியளவில் போலீசில் புகார் அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சம்பவத்தின் போது சமூக ஆர்வலர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதுடன், அவருடன் வந்த மற்றொருவர் தன்னை விலா பகுதியில் குத்தியதாகவும் புகார்தாரர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் சட்டம் பிரிவு 147-இன் கீழ் கலவரத்தில் ஈடுபட்டதாக விசாரணை நடைபெற்று வருகின்றது.








