Nov 29, 2026
Thisaigal NewsYouTube

அண்டை நாடுகளில் இஸ்ரேலின் உளவு அமைப்பு நடவடிக்கை அதிகரிப்பு - பிரதமர் அன்வார் எச்சரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அண்டை நாடுகளில் இஸ்ரேலின் உளவு அமைப்பு நடவடிக்கை அதிகரிப்பு - பிரதமர் அன்வார் எச்சரிக்கை

அண்டை நாடுகளில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், மலேசியா தனது தேசியப் பாதுகாப்பு கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பினாங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செமாராக் வாகாஃப் பெர்டானா 2026 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அண்டை நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள தளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் உளவு நடவடிக்கைகள் குறித்த விவரங்களைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்குமாறு தேசிய பாதுகாப்பு மன்றத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் மொசாட்டின் நடவடிக்கைகள் மூன்று முதல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இது மலேசியாவின் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய விவகாரம் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாய்லாந்தின் புக்கேட், பாங்கோக் மற்றும் அந்நாட்டின் தென்பகுதிகளில் இஸ்ரேலுடன் தொடர்புடைய தரப்பினர் நிலங்களை வாங்கியிருப்பதும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும் என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →