கோலாலம்பூர், செந்தூல் பகுதியில் நேற்று சனிக்கிழமை பெய்த கனமழையால் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் வடிகால் அமைப்புகளில் ஏற்பட்ட அடைப்புகளே வெள்ளத்திற்குக் காரணம் என கோலாலம்பூர் மேயர் டத்தோ ஶ்ரீ ஃபாட்லுன் மாக் உஜுட் தெரிவித்துள்ளார்.
வடிகால் பாதைகளில் குப்பைகள் தேங்கியதால் மழைநீர் வெளியேறுவதில் தடை ஏற்பட்டதாகவும், தற்போது அடைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜாலான் கிளாங் லாமா பகுதியில் வெள்ளப் பாதிப்பைக் குறைக்க 2027-ஆம் ஆண்டு மாற்று வடிகால் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் ஃபாட்லுன் மாக் உஜுட் தெரிவித்துள்ளார்.








