மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான ஏகேபிஎஸ்ஸின் முன்னாள் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஷுஹைலி முஹமட் ஸையின், புக்கிட் அமானின் தேசிய பொலீஸ் படைத் தலைவர் செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அங்கு அவர், வியூகத் திட்டமிடல் மற்றும் அனைத்துலக உறவுகளுக்கான தலைமை ஆணையர் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் கையெழுத்திட்ட நவம்பர் 29 -ஆம் தேதியிட்ட உத்தரவின்படி, இந்த இடமாற்றம் கடந்த நவம்பர் 24-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கான மேம்பட்ட பயிற்சியை நோக்கமாகக் கொண்ட பணியிட ஒதுக்கீட்டின் கீழ் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.








