Nov 29, 2026
Thisaigal NewsYouTube

தைப்பிங் மருத்துவர் திலக் மரணம்: குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க மருத்துவ சங்கம் கோரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தைப்பிங் மருத்துவர் திலக் மரணம்: குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க மருத்துவ சங்கம் கோரிக்கை

கடந்த செவ்வாய்க்கிழமை பணிக்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் உயிரிழந்த தைப்பிங் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஆர். திலக்கின் குடும்பத்தினருக்குத் தேவையான இழப்பீட்டை அரசாங்கம் வழங்க வேண்டுமென மலேசிய மருத்துவச் சங்கமான எம்எம்ஏ கோரிக்கை விடுத்துள்ளது.

அவரது குடும்பத்திற்கு வருமான இழப்பு மற்றும் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த உதவியை வழங்க வேண்டும் என்று எம்எம்ஏ தலைவர் டாக்டர் எல். சிவநேசன் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில் பணிக்குச் செல்லும் வழியில் உயிரிழக்கும் சுகாதாரப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க நிரந்தர அரசாங்கக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மருத்துவப் பணியாளர்களின் பயணப் பாதுகாப்பு, ஓய்வு வசதிகள் மற்றும் பணிநேரம் குறித்து சுகாதார அமைச்சகம் விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்றும் டாக்டர் எல். சிவநேசன் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →