Nov 29, 2026
Thisaigal NewsYouTube

நாடு முழுவதும் பொதுச் சந்தைகளை மேம்படுத்த 200 மில்லியனுக்கும் மேல் ஒதுக்கீடு – அமைச்சர் ஙா கோர் மிங் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நாடு முழுவதும் பொதுச் சந்தைகளை மேம்படுத்த 200 மில்லியனுக்கும் மேல் ஒதுக்கீடு – அமைச்சர் ஙா கோர் மிங் தகவல்

மடானி அரசாங்கத்தின் நான்கு ஆண்டு கால ஆட்சியில், நாடு முழுவதும் பொதுச் சந்தைகளைப் புனரமைக்கவும் மேம்படுத்தவும் 200 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

ஈப்போவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாசீர் பூத்தே சந்தையின் புதிய கட்டிடத்திற்கான வடிவமைப்புப் போட்டியின் பரிசளிப்பு விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஆண்டுக்காகக் கூடுதலாக 60 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றில் பொதுச் சந்தைகளை மேம்படுத்த 30 மில்லியன் ரிங்கிட்டும், உணவங்காடி வளாகங்களை மேம்படுத்த மற்றொரு 30 மில்லியன் ரிங்கிட்டும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், சந்தைகள், உணவங்காடி வளாகங்கள், பொதுக் கழிப்பறைகள், பூங்காக்கள், வடிகால் அமைப்புகள் மற்றும் சூரியசக்தி தெருவிளக்குகள் உள்ளிட்ட 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக் கட்டமைப்புத் திட்டங்களை அமைச்சு செயல்படுத்தியுள்ளதாகவும் ஙா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →