Nov 29, 2026
Thisaigal NewsYouTube

சரவாக் தேர்தலில் ஜசெக போட்டியிடுவது பக்காத்தான் ஒற்றுமையைப் பாதிக்காது – ஷாரெட்ஸான் ஜொஹான் நம்பிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சரவாக் தேர்தலில் ஜசெக போட்டியிடுவது பக்காத்தான் ஒற்றுமையைப் பாதிக்காது – ஷாரெட்ஸான் ஜொஹான்  நம்பிக்கை

சரவாக் மாநிலத் தேர்தலில் ஜசெக தனித்துப் போட்டியிடும் முடிவு, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் ஒற்றுமையையோ, அதன் தலைவரும் பிரதமருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவத்தையோ பாதிக்காது என்று ஜசெக கட்சியின் தேசிய உதவித் தலைவர் ஷாரெட்ஸான் ஜொஹான் தெரிவித்துள்ளார்.

சரவாக் மாநிலத்தில் தனது தேர்தல் வியூகம், பிரசார அணுகுமுறை மற்றும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரமும் சரவாக் ஜசெகவுக்கு இருப்பதாக இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் இந்த முடிவு திடீரென எடுக்கப்பட்டதல்ல என்றும், பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மன்றக் கூட்டத்திலேயே முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் சமமான பங்காளிகள் என்றும், ஒவ்வொரு கட்சிக்கும் தங்களது அரசியல் நிலைப்பாட்டையும் தேர்தல் வியூகத்தையும் சுதந்திரமாகத் தீர்மானிக்க உரிமை உண்டு என்பதையும் ஷாரெட்ஸான் ஜொஹான் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆகவே இந்த ஜனநாயக அணுகுமுறையானது கூட்டணியின் ஒற்றுமையை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பள்ளியில் ஆசிரியர்களைச் சந்தித்த பிறகே 200 ரிங்கிட் கல்வி உதவித் தொகை: பெற்றோர்களுக்கு அன்வார் வலியுறுத்தல்

பள்ளியில் ஆசிரியர்களைச் சந்தித்த பிறகே 200 ரிங்கிட் கல்வி உதவித் தொகை: பெற்றோர்களுக்கு அன்வார் வலியுறுத்தல்

இந்தியப் பயணத்தின் போது தவறுதலாகத் தடுக்கப்பட்ட சுமதிக்கு அரசாங்கம் 75 ஆயிரம் இழப்பீடு

இந்தியப் பயணத்தின் போது தவறுதலாகத் தடுக்கப்பட்ட சுமதிக்கு அரசாங்கம் 75 ஆயிரம் இழப்பீடு

சரவாக்கில் 29 தொகுதிகளில் போட்டியின்றி வெற்றி – 6.32 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தேவையில்லை

சரவாக்கில் 29 தொகுதிகளில் போட்டியின்றி வெற்றி – 6.32 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தேவையில்லை

கல்வி மட்டுமின்றி குழந்தைகளின் உணர்வுப்பூர்வ வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: அமைச்சர் நான்சி ஷுக்ரி

கல்வி மட்டுமின்றி குழந்தைகளின் உணர்வுப்பூர்வ வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: அமைச்சர் நான்சி ஷுக்ரி

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட டொயோட்டா ஹைலக்ஸ் – தந்தை, மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட டொயோட்டா ஹைலக்ஸ் – தந்தை, மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

வெள்ள பாதிப்பு: சபாவில் அதிகரிப்பு, சிலாங்கூர், பேராவில் குறைந்தது

வெள்ள பாதிப்பு: சபாவில் அதிகரிப்பு, சிலாங்கூர், பேராவில் குறைந்தது