Nov 29, 2026
Thisaigal NewsYouTube

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட டொயோட்டா ஹைலக்ஸ் – தந்தை, மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட டொயோட்டா ஹைலக்ஸ் – தந்தை, மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

நெகிரி செம்பிலான் மாநிலம் ஜெம்போல் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த டொயோட்டா ஹைலக்ஸ் வாகனம் ஆற்றில் பாய்ந்து, நீரோட்டத்தில் சுமார் 500 மீட்டர் தூரம் வரை அடித்துச் செல்லப்பட்டது.

இச்சம்பவத்தில் அதில் பயணம் செய்த தந்தையும் மகனும் அதிருஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

இச்சம்பவம் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் கம்போங் லங்காப் பகுதியில் நிகழ்ந்ததாக ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் நோர்ஹிஷாம் முஸ்தபார் தெரிவித்துள்ளார்.

54 வயதுடைய தந்தையும், 21 வயதுடைய மகனும் துரியான் தோட்டத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சறுக்கி ஆற்றில் விழுந்துள்ளது.

தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே இருவரும் வாகனத்திலிருந்து வெளியேறி உயிர் தப்பியதாகவும், இருவருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் நோர்ஹிஷாம் முஸ்தபார் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பள்ளியில் ஆசிரியர்களைச் சந்தித்த பிறகே 200 ரிங்கிட் கல்வி உதவித் தொகை: பெற்றோர்களுக்கு அன்வார் வலியுறுத்தல்

பள்ளியில் ஆசிரியர்களைச் சந்தித்த பிறகே 200 ரிங்கிட் கல்வி உதவித் தொகை: பெற்றோர்களுக்கு அன்வார் வலியுறுத்தல்

சரவாக் தேர்தலில் ஜசெக போட்டியிடுவது பக்காத்தான் ஒற்றுமையைப் பாதிக்காது – ஷாரெட்ஸான் ஜொஹான்  நம்பிக்கை

சரவாக் தேர்தலில் ஜசெக போட்டியிடுவது பக்காத்தான் ஒற்றுமையைப் பாதிக்காது – ஷாரெட்ஸான் ஜொஹான் நம்பிக்கை

இந்தியப் பயணத்தின் போது தவறுதலாகத் தடுக்கப்பட்ட சுமதிக்கு அரசாங்கம் 75 ஆயிரம் இழப்பீடு

இந்தியப் பயணத்தின் போது தவறுதலாகத் தடுக்கப்பட்ட சுமதிக்கு அரசாங்கம் 75 ஆயிரம் இழப்பீடு

சரவாக்கில் 29 தொகுதிகளில் போட்டியின்றி வெற்றி – 6.32 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தேவையில்லை

சரவாக்கில் 29 தொகுதிகளில் போட்டியின்றி வெற்றி – 6.32 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தேவையில்லை

கல்வி மட்டுமின்றி குழந்தைகளின் உணர்வுப்பூர்வ வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: அமைச்சர் நான்சி ஷுக்ரி

கல்வி மட்டுமின்றி குழந்தைகளின் உணர்வுப்பூர்வ வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: அமைச்சர் நான்சி ஷுக்ரி

வெள்ள பாதிப்பு: சபாவில் அதிகரிப்பு, சிலாங்கூர், பேராவில் குறைந்தது

வெள்ள பாதிப்பு: சபாவில் அதிகரிப்பு, சிலாங்கூர், பேராவில் குறைந்தது