கோலாலம்பூர், ஜூலை.24-
1எம்டிபி நிதி மோசடி தொடர்பில் மலேசிய போலீசாரால் தேடப்பட்டு வரும் தொழில் அதிபர் ஜோ லோ, ஆஸ்திரேலிய கடப்பிதழைப் பயன்படுத்து ஷங்ஹாயில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இரண்டு பத்திரிகையாளர்களான பிராட்லி ஹோப் மற்றும் டோம் ரைட் ஆகியோர் தெரிவித்துள்ள தகவல்கள் வெறும் செய்தி அளவில் மட்டுமே பார்க்க முடியும் என்று சைஃபுடின் விளக்கினார்.
ஜோ லோ தங்கியிருக்கும் இடம் மற்றும் அவர் தனிநபர் ஒருவரின் கடப்பிதழைப் பயன்படுத்தியுள்ளார் என்று கூறப்படுவது, இதுவரையில் அவற்றின் உண்மைத் தன்மையை அறிய முடியவில்லை என்று சைஃபுடின் தெளிவுபடுத்தினார்.








