Oct 7, 2026
Thisaigal NewsYouTube

லாவோஸ் போதைப்பொருள் கடத்தல் வழக்கு – சுபாங் விமான நிலையத்தில் விமானி உட்பட 4 பேர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லாவோஸ் போதைப்பொருள் கடத்தல் வழக்கு – சுபாங்  விமான நிலையத்தில் விமானி உட்பட 4 பேர் கைது

521 கிலோ மெத்தாம்பெத்தமின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட லாவோஸ் கடத்தல் வழக்கில் தொடர்புடைய தனியார் விமானத்தின் நிறுவன உரிமையாளரான விமானி உட்பட நான்கு பேர் இன்று சுபாங் சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமானம் சுபாங்கிலிருந்து மணிலா புறப்படுவதற்கு சற்று முன்னர், ஹஙார் ஒன்றில் நால்வரும் கைது செய்யப்பட்டதாக மலாய் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் விமானி, துணை விமானி மற்றும் இரண்டு பெண் பணியாளர்களும் அடங்குவர்.

கைது செய்யப்பட்ட விமானியின் நிறுவனம், இன்று சுபாங்கில் தடுத்து வைக்கப்பட்ட விமானத்தையும், அக்டோபர் 1ஆம் தேதி லாவோஸ், லுவாங் பிரபாங் இண்டர்நேஷனல் ஏர்போர்ட் சென்ற தனியார் விமானத்தையும் கொண்டுள்ளது. அந்த விமானத்தில் 21 பெட்டிகளில் 521 கிலோ மெத்தாம்பெத்தமின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன், 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒரு மலேசியரும் அடங்குகிறார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →