May 21, 2026
Thisaigal NewsYouTube
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு 8 லட்சத்து 40 ஆயிரம் மானியம் ஏற்றுக் கொள்ளக்கூடியதா ?
தற்போதைய செய்திகள்

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு 8 லட்சத்து 40 ஆயிரம் மானியம் ஏற்றுக் கொள்ளக்கூடியதா ?

Share:

கெடா மாநில அரசாங்கத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் மொத்தம் ஆயிரத்து 241 (1,241) கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநில மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் அறிவித்துள்ளார்.

ஆனால், 1,241 கோடி வெள்ளி பட்ஜெட்டில் முஸ்லிம் அல்லாத சமூகமான சீனர்கள், இந்தியர்கள் மற்றும் சயாமியர்களுக்கு மிகச்சிறிய அளவில் அதாவது மொத்தம் 8 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி ஒதுக்கப்பட்டது ஏற்றுக்கொள்ளக்கூடியதா? என்று கெடா மாநில மசீச. தலைவரும், வழக்கறிஞருமான சுவா தியோங் கீ கேள்வி எழுப்பியுள்ளார். .

கெடா மாநிலத்தில் சீனர் , இந்தியர் , சயாமியர் , அரசு சார்ப்பற்ற இயக்கங்கள் , சீனப்பள்ளிகள் , தமிழ்ப்பள்ளிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்காக மாநில அரசாங்கம் ஒட்டுமொத்தமாக ஒதுக்கியுள்ள 8 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியை பார்க்கும் போது, கெடா மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர் என்று என்பது தெளிவாக புலப்படுத்துகிறது என்று சுவா தியோங் கீ குறிப்பிட்டார்.

பாஸ் கட்சி தலைமையிலாான கெடா மாநில அரசாங்கத்திற்கு தலைமையேற்றுள்ள மந்திரி பெசார் சனூசி முகமட் நூர், முஸ்லிம் அல்லாதவர்களை அறவே மதிக்கவில்லை, உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லை என்பதையே அவரின் இந்த செயல் காட்டுகிறது என்று தியோங் கீதெரிவித்துள்ளார்.

Related News