Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தாயாரை கொன்றதாக மகன் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

தாயாரை கொன்றதாக மகன் மீது குற்றச்சாட்டு

Share:

தமது சொந்த தாயாரை கோடாரியினால் வெட்டிக் கொன்றதாக நபர் ஒருவர் மூவார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார். 47 வயதான லிம் செங் சாய் என்ற அந்த நபர் கடந்த ஜுன் 18 ஆம் தேதி இரவு 8.20 மணியளவில் மூவார், தாமான் தெமியாங் உத்தாமாவில் உள்ள வீட்டில் தமது தாயார் 73 வயதுடைய தான் சூ கெக் என்பவரை கொன்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளதால் அவரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

இவ்வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதற்கு ஏதுவாக வழக்கு, வரும் ஜுலை 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதற்கு மாஜிஸ்ட்ரெட் அனாலியா கமாருடின் அனுமதி அளித்தார்.அதேவேளையில் சம்பந்தப்பட்ட நபரை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தமாறு பிராசிகியூஷன் தரப்புக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!