Jul 31, 2026
Thisaigal NewsYouTube
வெள்ள நிலைமையை சமாளிக்க 800 க்கும் மேற்பட்ட வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

வெள்ள நிலைமையை சமாளிக்க 800 க்கும் மேற்பட்ட வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்

Share:

கிழக்கு கரையோர மாநிலங்களில் மோசமடைந்து வரும் வெள்ள நிலைமையை சமாளிப்பதற்கு 800 க்கும் மேற்பட்ட வீரர்கள் களம் இறக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

போலீஸ் படை, ரேலா படை, தன்னார்வப்படை என 800 க்கும் மேற்பட்டவர்கள் கிளந்தான், திரெங்கானு மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களில் களம் இறக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

களம் இறக்கப்பட்டுள்ள வீரர்களில் 647 பேர், போலீஸ் படையைச் சேர்ந்தர்கள் ஆவார். தவிர 35 இயந்திரப் படகுகள், 20 கனரக லோரிகள், 56 Four Wheel – drive வாகனங்கள் உட்பட வெள்ளத் தடுப்பிற்கான உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

வெள்ள நிலைமை மேலும் மோசமடைமயுமானால் ஆள்பலம் அதிகரிக்கப்படும்.

அவசியம் ஏற்படும் பட்சத்தில் கடல் சார் அமலாக்கப்பிரிவினரும் களம் இறக்கப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சு இன்று மாலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related News

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு