கடந்த 2017 ஆம் ஆண்டு மூதாட்டி ஒருவரை கொலை செய்ததற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரருக்கு, தூக்குத் தண்டனைக்கு பதிலாக 40 ஆண்டு சிறைத் தண்டனையை புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றம் இன்று விதித்தது.
சர்மயடி அப்துல்லா என்ற 46 வயதுடைய அந்த முன்னாள் . இராணுவ வீரருக்கு 12 பிரம்படித் தண்டனை விதிக்கவும் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ ஹதாரியா சையத் இஸ்மாயில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நபர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி காலை 11 மணியளவில் கிளந்தான், கோல கிராய், ஜாலான் பத்து லடா, கிராமம் மெங்கேபாங் என்ற இடத்தல் 61 வயது ரோகியா மாமத் என்பவரை கொலை செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








