பாலியல் தொல்லைக்கு இலக்கான ஆண்கள் , தங்களுக்கு நேர்ந்த இந்தப் பிரச்சனை குறித்து புகாரளிக்க துணிச்சலாக முன் வர வேண்டும் என மகளிர், குடும்ப, சமூக நல அமைச்சர் டத்தோ செரி நான்சி ஷுக்ரி தெரிவித்தார்.
தங்களுக்கு நேரும் பிரச்சனையை மனதில் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவர்கள் ஆண்கள்.
பணியிடத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானவர்கள் பெரும்பாலும் தங்கள் மேலதிகாரிகளை சம்பந்தப்பட்டிருப்பதையும் பாதிக்கப்பட்டவரின் அச்சத்தையும் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தைப் பற்றிய விழிப்புணர்வு நிலை இன்னும் குறைவாக இருப்பதால் இவ்வாறு வலியுறுத்துவதாக அவர் கூறினார்.
தமது அமைச்சு பெற்ற மொத்தப் புகார்களில் 10 விழுக்காடு ஆண்கள் சந்திக்கும் பிரச்சனை எனக் கூறும் அவர், பாதிக்கப்பட்ட எல்லா ஆண்களும் புகார் கொடுப்பதில்லை என்றார்.
எனவே, இந்த விவாகாரத்தை சாதாரணமாக நினைத்து விடாமல் பாலியல் தொல்லைக்கு இலக்கான எல்லா தரப்பு வயது ஆண்களும் துணிந்து புகார் அளிக்க வேண்டும் என்றார் அவர்.








