ஈப்போ, ஆகஸ்ட்.04-
வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி கோல கங்சார், இஸ்தானா இஸ்கண்டாரியா அரண்மனையில் அரசத் திருமணம் ஒன்று நடைபெறவிருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி தொடர்பில் பேரா சுல்தான் அலுவலகம், போலீசில் புகார் செய்துள்ளது.
அந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் உண்மையில்லை என பேரா சுல்தானின் அரசுப் பணிகளுக்கான மேலாளர் டத்தோ பெங்கெலோலா பிஜாயா, மியோர் ஹெஸ்புல்லா மியோர் அப்துல் மாலிக் தெரிவித்தார்.
வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி பேரா அரண்மனையில் எந்தவொரு திருமணச் சடங்கும் நடைபெறவில்லை என்பதைப் பொதுமக்களுக்குத் தெரிவித்துக் கொள்வதாக இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் மியோர் ஹெஸ்புல்லா தெரிவித்துள்ளார்.








