Sep 30, 2026
Thisaigal NewsYouTube

எரிபொருள் விலை மீண்டும் குறைந்துள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எரிபொருள் விலை மீண்டும் குறைந்துள்ளது

கோலாலம்பூர், ஜனவரி.14-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் மானியமற்ற பெட்ரோல் ரோன்95, பெட்ரோல் ரோன்97 மற்றும் தீபகற்ப மலேசியாவில் டீசல் ஆகியவற்றின் விலை மீண்டும் குறைந்துள்ளது.

பெட்ரோல் ரோன்97 லிட்டருக்கு 3 சென் குறைந்து 3 ரிங்கிட் 08 சென்னாகவும், மானியமற்ற பெட்ரோல் ரோன்95, லிட்டருக்கு 2 சென் குறைந்து 2 ரிங்கிட் 52 சென்னாகவும் விற்கப்படுகிறது.

தீபகற்ப மலேசியாவில் டீசல், லிட்டருக்கு 5 சென் குறைந்து 2 ரிங்கிட் 84 காசுக்கு விற்கப்படுகிறது.

மானியத்திற்கான பெட்ரோல் ரோன்95 விலையில் எந்த மாற்றமும் இல்லை. அது லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென்னாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →