மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்பிஆர்எம் இன் 56வது ஆண்டு நிறைவை ஒட்டி எல்லா மத வழிபாட்டுத் தலங்களிலும் சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டது,
இசுலாம், கிறித்தவம், பௌத்தம், இந்து ஆகிய மத வழிபாட்டுத் தலங்களில் ஆண்டுதோறும் இவ்வாறான சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சமூகக் கல்வி பிரிவின் சமூகப் பண்பாடு, அரசியல் கிளையின் முதுநிலை உதவி கண்காணிப்பாளர் திரு கேசவன் இராதாகிருஷ்ணன் திசைகளிடம் தெரிவித்தார்.
நாடு முழுவதும் மலேசிய ஊழக் தடுப்பு ஆணையத்தில் பணி புரிகிற ஊழியர்களின் பாதுகாப்புக்காகவும் அவர்களின் நலனுக்ககவும் இந்த சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.
ஆணையத்தின் பணியாளர்கள் கடமையை மேற்கொள்ளும்போது எந்தவித தங்குதடையும் இன்றி சிறப்பாக செயல்பட இவ்வாறான சிறப்பு வழிபாட்டைத் தமது பிரிவில் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அவர் சொன்னார்.
நாட்டில் கையூட்டும் ஊழலும் துடைத்தொழிக்கப்பட வேண்டிய நச்சு. அந்த சீறிய பணியில் இறங்கி இருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் செவ்வனே செயல்பட்டு ஆணையத்தின் குறிக்கோளை அடைய இறைவன் அருள் கிடைக்க வேண்டி இங்கு பணிபுரியும் எல்லா ஊழியர்களின் சமய நம்பிக்கையின்படி இந்த சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டதாக கேசவன் தெரிவித்தார்.








