May 4, 2026
Thisaigal NewsYouTube
கோலா பிலாவில் 80 வயது தாயாரை டின் திறப்பானால் குத்திய மகள் கைது
தற்போதைய செய்திகள்

கோலா பிலாவில் 80 வயது தாயாரை டின் திறப்பானால் குத்திய மகள் கைது

Share:

கோலா பிலா, பிப்ரவரி.21-

நெகிரி செம்பிலான் மாநிலம் கோலா பிலாவில் நேற்று தனது 80 வயது தாயாரை டின் திறப்பானால் குத்திய 50 வயது பெண் கைது செய்யப்பட்டார்.

நேற்று இரவு 7.08 மணியளவில் தாயாருக்கும், மகளுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக, இச்சம்பவம் நடந்ததாக கோலா பிலா மாவட்ட போலீஸ் தலைவர் முஸ்தஃபா ஹுசேன் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலின் போது அம்மூதாட்டியின் கழுத்தில் காயம் ஏற்பட்டதையடுத்து, ரெம்பாவ் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு, மனநலப் பிரச்சினைகள் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவ்வழக்கானது குற்றவியல் சட்டம் பிரிவு 326 -கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

Related News