Oct 4, 2026
Thisaigal NewsYouTube

கிளந்தானில் 3 வாகனங்கள் மோதி விபத்து: குழந்தை உட்பட 4 பேர் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கிளந்தானில் 3 வாகனங்கள் மோதி விபத்து: குழந்தை உட்பட 4 பேர் பலி

கிளந்தானிலிருந்து கிரிக் நோக்கிச் செல்லும் கிழக்கு–மேற்கு நெடுஞ்சாலையில், மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் பெண் குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

இன்று நண்பகல் 12.56 மணியளவில் விபத்து தொடர்பாக அவசர அழைப்பு கிடைத்ததாக கிரிக் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை நிலையத் தலைவர் ராயிஸ் மாஹ்மூட் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு லோரியும் இரண்டு கார்களும் விபத்தில் சிக்கியிருப்பதைக் கண்டறிந்தனர்.

இந்த விபத்தில், பெரோடுவா அஸியா காரில் பயணம் செய்த இரு ஆண்கள், ஒரு பெண் மற்றும் பெண் குழந்தை உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், ஒரு ஆண் குழந்தை காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்தவர்களின் உடல்கள் மேல்நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →