Jun 12, 2026
Thisaigal NewsYouTube
அரசுக்கு எதிராக பொய் செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை: பொதுச்சேவைத்துறை எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

அரசுக்கு எதிராக பொய் செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை: பொதுச்சேவைத்துறை எச்சரிக்கை

Share:

அரசாங்கம், அமைச்சுகள் அல்லது அரசு ஏஜென்சிகளின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் பொய் தகவல்களையோ அல்லது காணொளிகளையோ பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுச்சேவைத்துறை துணைத் தலைமை இயக்குநர் டத்தோ முகமட் சைஃபுல் இப்ராகிம் எச்சரித்துள்ளார்.

பொதுச்சேவையின் மீதான மக்கள் நம்பிக்கையை குலைக்கும் இத்தகைய செயல்களில் இருந்து துறைகளின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட துறைகள் தங்கள் நற்பெயரைப் பாதுகாக்க போலீசில் புகார் அளிக்கலாம் என்றும், தீவிரமான வழக்குகள் சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார். முறையான விசாரணைக்கு பிறகே இறுதி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Related News