நேற்று காஜாங்கிலுள்ள தாமான் செபகாட் இண்டா 2 அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்திலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழந்தான்.
இச்சம்பவம் குறித்து நேற்று காலை சுமார் 7.10 மணியளவில் அவசர அழைப்பு பெறப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்துள்ளார்.
அச்சிறுவன் அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என நம்பப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ அதிகாரி, அச்சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளையில், குழந்தைகள் மற்றும் சிறார்களுடன் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் பெற்றோர் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் வலியுறுத்தியுள்ளார்.








