Jul 15, 2026
Thisaigal NewsYouTube
"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து
தற்போதைய செய்திகள்

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

Share:

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இருந்து பெர்சாத்து கட்சியை யாராலும் விருப்பப்படி வெளியேற்ற முடியாது என்று பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் மர்சுகி முகமது தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் நியமனக் கடிதங்களை வழங்கும் முழுமையான அதிகாரம் கூட்டணித் தலைவருக்கு இல்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், பெரிக்காத்தான் நேஷனல் அரசியலமைப்பு, பிரிவு 7A-இன் படி, கூட்டணியில் உள்ள உறுப்புக் கட்சிகளுக்கு எதிரான எந்த ஒழுங்கு நடவடிக்கையும் கூட்டணியின் தலைவர்கள் மன்றத்தின் ஒருமித்த ஒப்புதலுடன் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்றும் மர்சுகி முகமது குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், இதுபோன்ற விவகாரங்களில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் அந்தத் தலைவர்கள் மன்றத்திற்கே இருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

எடுக்கப்படும் முடிவுகளில் தலைவர்களில் ஒருவர் உடன்படவில்லை என்றாலும், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று மர்சுகி முகமது தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related News