Sep 25, 2026
Thisaigal NewsYouTube
திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

Share:

கோலா திரெங்கானுவில் 13 வயது பள்ளி மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சந்தேகிக்கப்படும் 30 வயது ஆண் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாக கோலா திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்லி நூர் தெரிவித்துள்ளார்.

தொடக்கப்பள்ளி ஆசிரியரான அந்நபர், கடந்த ஜூன் 4-ஆம் தேதி காலை 8 மணியளவில், கோலா திரெங்கானுவிலுள்ள தங்கும் விடுதியில் வைத்துத் அம்மாணவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இவ்வழக்கானது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017, பிரிவு 14(a), 14(d) மற்றும் 15(b)-இன் கீழ், உடல் ரீதியான மற்றும் உடல் சாராத பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

மேலும் சந்தேக நபர் வரும் ஜூன் 21-ஆம் தேதி வரை விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Related News