Oct 14, 2026
Thisaigal NewsYouTube

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

மலேசியாவுக்கும் சிலி நாட்டிற்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதில் சிறப்பான பங்களிப்பு வழங்கிய இரு மலேசியர்களுக்கு, சிலி அரசாங்கம் தனது உயரிய விருதுகளில் ஒன்றான ஆர்டர் ஓஃப் பெர்னார்டோ ஓ’ஹிக்கின்ஸ் (Order of Bernardo O'Higgins) விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

பினாங்கு மாநிலத்தில், சிலியின் கௌரவத் தூதராகப் பொறுப்பு வகித்து வரும் டத்தின் ஜோலின் தியோ லே ஃபுங் மற்றும் தொழிலதிபர் லியூ தாய் ஷின் ஆகிய இருவருக்கும் இந்த விருதானது வழங்கப்பட்டது.

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி, மலேசியாவுக்கான சிலி நாட்டுத் தூதர் ஜேய்ம் முனோஸ் சண்டொவல். Jaime தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ்விருதுகளை வழங்கினார்.

வெளிநாட்டினர் சிலி நாட்டுக்கு ஆற்றிய சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த விருது, கலை, அறிவியல், கல்வி, தொழில்துறை, வர்த்தகம் மற்றும் மனிதாபிமான, சமூக ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களைக் கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்

‘அலி பாபா’ நடைமுறைகளைக் குற்றமாகக் கருத அரசாங்கம் திட்டம் / சட்டமாக்க ஆலோசனை

‘அலி பாபா’ நடைமுறைகளைக் குற்றமாகக் கருத அரசாங்கம் திட்டம் / சட்டமாக்க ஆலோசனை

சபாவில் அதிகாரியைத் தாக்கி கடலில் மூழ்கடிக்க முயன்ற சந்தேக நபர் – எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு

சபாவில் அதிகாரியைத் தாக்கி கடலில் மூழ்கடிக்க முயன்ற சந்தேக நபர் – எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு

ஜப்பானில் போதைப் பொருட்களுடன் சிக்கிய மலேசியர்கள்: தனிப்படை அமைக்கிறது புக்கிட் அமான்

ஜப்பானில் போதைப் பொருட்களுடன் சிக்கிய மலேசியர்கள்: தனிப்படை அமைக்கிறது புக்கிட் அமான்

2030-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க மலேசியா இலக்கு

2030-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க மலேசியா இலக்கு

பேங்க் நெகாரா வங்கி, ஆளுநர், மூத்த அதிகாரிகள் பெயரில் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பேங்க் நெகாரா வங்கி, ஆளுநர், மூத்த அதிகாரிகள் பெயரில் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை