Oct 14, 2026
Thisaigal NewsYouTube

பேங்க் நெகாரா வங்கி, ஆளுநர், மூத்த அதிகாரிகள் பெயரில் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேங்க் நெகாரா வங்கி, ஆளுநர், மூத்த அதிகாரிகள் பெயரில் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பேங்க் நெகாரா மலேசியா வங்கி மற்றும் அதன் ஆளுநர் அப்துல் ரஷீட் ஃகாஃபோர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து, டீப்ஃபேக்கைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேங்க் நெகாரா வெளியிட்டுள்ள அறிக்கையில், தாங்களோ அல்லது மலேசிய பத்திரங்கள் ஆணையமான எஸ்சியோ தனியார் முதலீட்டுத் திட்டங்களை விளம்பரப்படுத்தவோ அல்லது பரிந்துரைக்கவோ செய்வதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

அது போன்ற முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பாகக் கிடைக்கும் தகவல்களை நம்பி பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மூலம் அவற்றின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், பேங்க் நெகாரா அதிகாரிகளைப் போல உருவாக்கப்பட்ட போலிக் காணொளிகளின் எடுத்துக்காட்டுகளைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக அதிகாரப்பூர்வ இணையதளம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய முதலீட்டுத் திட்டங்கள் அல்லது நிறுவனங்கள் குறித்து பேங்க் நெகாராவின் நிதி நுகர்வோர் எச்சரிக்கைப் பட்டியல் மற்றும் பத்திர ஆணையத்தின் முதலீட்டாளர் எச்சரிக்கைப் பட்டியல் ஆகியவற்றிலும் சரிபார்க்கலாம் என்றும் பொதுமக்களுக்கு பேங்க் நெகாரா அறிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
‘அலி பாபா’ நடைமுறைகளைக் குற்றமாகக் கருத அரசாங்கம் திட்டம் / சட்டமாக்க ஆலோசனை

‘அலி பாபா’ நடைமுறைகளைக் குற்றமாகக் கருத அரசாங்கம் திட்டம் / சட்டமாக்க ஆலோசனை

சபாவில் அதிகாரியைத் தாக்கி கடலில் மூழ்கடிக்க முயன்ற சந்தேக நபர் – எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு

சபாவில் அதிகாரியைத் தாக்கி கடலில் மூழ்கடிக்க முயன்ற சந்தேக நபர் – எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு

ஜப்பானில் போதைப் பொருட்களுடன் சிக்கிய மலேசியர்கள்: தனிப்படை அமைக்கிறது புக்கிட் அமான்

ஜப்பானில் போதைப் பொருட்களுடன் சிக்கிய மலேசியர்கள்: தனிப்படை அமைக்கிறது புக்கிட் அமான்

2030-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க மலேசியா இலக்கு

2030-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க மலேசியா இலக்கு

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்