Oct 14, 2026
Thisaigal NewsYouTube

2030-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க மலேசியா இலக்கு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
2030-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க மலேசியா இலக்கு

வரும் 2030-ஆம் ஆண்டிற்க்குள் மலேசியாவில் 2.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் ஸம்ரி அப்துல் காடீர் தெரிவித்துள்ளார்.

தற்போது 180 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1.7 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் மலேசியாவில் உயர்கல்வி பயின்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை ஈர்ப்பதன் மூலம், உயர்கல்வி பயில்வதற்கான விருப்பமான நாடாக மலேசியாவின் நிலையை வலுப்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற 2026 அனைத்துலக இளம் எதிர்காலத் தலைவர்கள் உச்சநிலை மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாட்டு மாணவர்களின் வருகை மூலம் மலேசியப் பொருளாதாரத்திற்கு ஆண்டுக்கு குறைந்தது 16 பில்லியன் ரிங்கிட் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதனுடன், உள்ளூர் வணிகங்களுக்கு வருவாய் ஈட்டித்தரும் பிற பொருளாதார நடவடிக்கைகளின் மறைமுகப் பலன்கள் இந்தக் கணக்கீட்டில் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
‘அலி பாபா’ நடைமுறைகளைக் குற்றமாகக் கருத அரசாங்கம் திட்டம் / சட்டமாக்க ஆலோசனை

‘அலி பாபா’ நடைமுறைகளைக் குற்றமாகக் கருத அரசாங்கம் திட்டம் / சட்டமாக்க ஆலோசனை

சபாவில் அதிகாரியைத் தாக்கி கடலில் மூழ்கடிக்க முயன்ற சந்தேக நபர் – எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு

சபாவில் அதிகாரியைத் தாக்கி கடலில் மூழ்கடிக்க முயன்ற சந்தேக நபர் – எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு

ஜப்பானில் போதைப் பொருட்களுடன் சிக்கிய மலேசியர்கள்: தனிப்படை அமைக்கிறது புக்கிட் அமான்

ஜப்பானில் போதைப் பொருட்களுடன் சிக்கிய மலேசியர்கள்: தனிப்படை அமைக்கிறது புக்கிட் அமான்

பேங்க் நெகாரா வங்கி, ஆளுநர், மூத்த அதிகாரிகள் பெயரில் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பேங்க் நெகாரா வங்கி, ஆளுநர், மூத்த அதிகாரிகள் பெயரில் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்