Oct 14, 2026
Thisaigal NewsYouTube

‘அலி பாபா’ நடைமுறைகளைக் குற்றமாகக் கருத அரசாங்கம் திட்டம் / சட்டமாக்க ஆலோசனை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
‘அலி பாபா’ நடைமுறைகளைக் குற்றமாகக் கருத அரசாங்கம் திட்டம் / சட்டமாக்க ஆலோசனை

மலேசியாவில் உரிமங்களைப் பிறருக்கு விற்பனை செய்யும் “அலி பாபா’ நடைமுறைகள் மற்றும் ஆதாயம் தேடும் செயல்களைக் கட்டுப்படுத்த, அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் அல்லது தற்போதுள்ள சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவர பொருளாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து பொருளாதார அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமட் நாசீர் வெளியிட்டுள்ள தகவலில், உள்ளாட்சி அமைப்புகளின் உரிமப் பரிமாற்றத் தடைகள் உள்ளிட்ட தற்போதைய சட்டங்கள் இத்தகைய நடைமுறைகளைக் கட்டுப்படுத்தப் போதுமானதாக இல்லை என்றார்.

உரிமங்களை விற்பனை செய்வது தற்போது குற்றவியல் குற்றமாக வரையறுக்கப்படாததால், இதைக் குற்றமாக அறிவிக்கும் புதிய சட்டத்தின் அவசியம் குறித்து ஆய்வு செய்யப்படுவதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், உரிமங்கள், ஒப்பந்தங்கள் மற்றும் வசதிகள் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகள் பொருளாதாரத் திறனைப் பாதிப்பதுடன், போட்டியைக் குறைத்து உள்ளூர் நிறுவனங்கள் தங்களது உண்மையான திறனை வளர்த்துக் கொள்வதற்கும் தடையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த புதிய சட்டம் கொண்டு வருவதா? அல்லது ஏற்கெனவே உள்ள சட்டங்களைத் திருத்துவதா? என்பது குறித்து அமைச்சுகள், அரசாங்க அமைப்புகள் மற்றும் தொடர்புடைய தரப்புகளுடன் இணைந்து ஆய்வு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்

சபாவில் அதிகாரியைத் தாக்கி கடலில் மூழ்கடிக்க முயன்ற சந்தேக நபர் – எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு

சபாவில் அதிகாரியைத் தாக்கி கடலில் மூழ்கடிக்க முயன்ற சந்தேக நபர் – எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு

ஜப்பானில் போதைப் பொருட்களுடன் சிக்கிய மலேசியர்கள்: தனிப்படை அமைக்கிறது புக்கிட் அமான்

ஜப்பானில் போதைப் பொருட்களுடன் சிக்கிய மலேசியர்கள்: தனிப்படை அமைக்கிறது புக்கிட் அமான்

2030-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க மலேசியா இலக்கு

2030-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க மலேசியா இலக்கு

பேங்க் நெகாரா வங்கி, ஆளுநர், மூத்த அதிகாரிகள் பெயரில் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பேங்க் நெகாரா வங்கி, ஆளுநர், மூத்த அதிகாரிகள் பெயரில் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்