Oct 14, 2026
Thisaigal NewsYouTube

ஜப்பானில் போதைப் பொருட்களுடன் சிக்கிய மலேசியர்கள்: தனிப்படை அமைக்கிறது புக்கிட் அமான்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜப்பானில் போதைப் பொருட்களுடன் சிக்கிய மலேசியர்கள்: தனிப்படை அமைக்கிறது புக்கிட் அமான்

ஜப்பானின் தோக்யோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் சுமார் 5 கிலோ கொக்கைன் போதைப்பொருளைக் கடத்த முயன்ற 5 மலேசியர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணைக்காக புக்கிட் அமான், தனிப்படையை ஜப்பானுக்கு அனுப்பவுள்ளது.

இது குறித்து புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹுசேன் ஓமார் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், கைது செய்யப்பட்டவர்களுக்கு உள்ளூர் அல்லது அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்றார்.

மேலும், போதைப்பொருட்களின் பின்புலத்தைக் கண்டறியவும், கும்பலின் மற்ற உறுப்பினர்களை அடையாளம் காணவும் ஜப்பான் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்ட 5 பேரும், தங்களது காலணிகளின் அடிப்பகுதியில் மறைத்து கொக்கைனை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகின்றது.

ஒவ்வொருவரும் சுமார் ஒரு கிலோ கொக்கைனை, இரு காலணிகளின் அடிப்பகுதியிலும் தலா 500 கிராம் வீதம் மறைத்து வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெலிகிராம் செயலி மூலம், அறிமுகமான ஒருவர், போதைப் பொருட்களை கொண்டு செல்ல, 8 ஆயிரம் ரிங்கிட் வழங்குவதாக தெரிவித்ததாக, கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் கேஎல்ஐஏ விமான நிலையத்திலிருந்து போதைப்பொருளைக் கொண்டு சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
‘அலி பாபா’ நடைமுறைகளைக் குற்றமாகக் கருத அரசாங்கம் திட்டம் / சட்டமாக்க ஆலோசனை

‘அலி பாபா’ நடைமுறைகளைக் குற்றமாகக் கருத அரசாங்கம் திட்டம் / சட்டமாக்க ஆலோசனை

சபாவில் அதிகாரியைத் தாக்கி கடலில் மூழ்கடிக்க முயன்ற சந்தேக நபர் – எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு

சபாவில் அதிகாரியைத் தாக்கி கடலில் மூழ்கடிக்க முயன்ற சந்தேக நபர் – எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு

2030-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க மலேசியா இலக்கு

2030-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க மலேசியா இலக்கு

பேங்க் நெகாரா வங்கி, ஆளுநர், மூத்த அதிகாரிகள் பெயரில் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பேங்க் நெகாரா வங்கி, ஆளுநர், மூத்த அதிகாரிகள் பெயரில் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்