புச்சோங், டி'தீவு பழைய ஈயசுரங்கப் பகுதிக்கு அருகில் நேற்று எரிந்த நிலையில் கிடந்த உடல் அவயங்கள் ஓர் ஆணுடையது என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
மருத்துவ தடயவியல் பரிசோதனைக்குப் பிறகு அந்த உடல் அவயங்கள் மனிதருடையது என்பது உறுதி செய்யப்பட்டதாக செபாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் கமருல் வான் அஸ்ரப் யூசுப் தெரிவித்தார்.
அந்த நபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக ஏசிபி வான் கமருல் தெரிவித்தார்.
சுங்கை ரசாவ் அருகில் பூஞ்சோங் விலிருந்து சைபர்ஜெயா செல்லும் சாலையில் சுமார் 10 மீட்டர் தூரத்தில் தீயில் கருகிய உடல் அவயங்கள் கிடப்பதாக பொது மக்களிடம் இருந்து கிடைத்த தகவலை தொடர்ந்து அவ்விடத்திற்கு போலீசார் விரைந்ததாக அவர் மேலும் விவரித்தார்.








